வாகனம் மோதி வாலிபர் பலி

திருமங்கலம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்

Update: 2021-03-26 18:54 GMT
திருமங்கலம்,மார்ச்
திருமங்கலம் அருகே உள்ள திரளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் பிச்சைமுத்து (வயது 23). மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். வழியில் ஆலம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பிச்சைமுத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்