திருவிளக்கு பூஜையில் 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்பு

கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜையில் 2 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-03-26 18:32 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ளது கோட்டூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது இந்த கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில் 2 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

மேலும் செய்திகள்