ஆம்பூரில் தேர்தல் புறக்கணிப்பு துண்டு பிரசுரம் அச்சடித்த 2 அச்சகத்துக்கு சீல்

ஆம்பூரில் தேர்தல் புறக்கணிப்பு துண்டு பிரசுரம் அச்சடித்த 2 அச்சகத்துக்கு சீல்

Update: 2021-03-26 18:31 GMT
ஆம்பூர்

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதி பாலாற்றங்கரையோரம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு, அப்பகுதி பொதுமக்கள் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்காக, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.கஸ்பா பகுதி பொதுமக்கள் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக துண்டு பிரசுரம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் விசாரணை நடத்தி, துண்டு பிரசுரம் அச்சடித்த ஏ.கஸ்பா பகுதியைச் சேர்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினர் இ.சுரேஷ்பாபு (வயது 52), துண்டு பிரசுரத்தை வடிவமைத்து தந்த ஒரு பிரிண்டர்ஸ் உரிமையாளர் சோமலாபுரம் ஊராட்சி வீரராகவபுரம் கிராமத்தைச் ேசர்ந்த சாம்சன் (38), துண்டு பிரசுரம் அச்சடித்து வழங்கிய மற்றொரு பிரிண்டர்ஸ் உரிமையாளர் சாத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25) ஆகிய 3 ேபர் மீதும் ேதர்தல் விதிமுறையை மீறி தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தியதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 2 பிரிண்டர்ஸ் நிறுவனத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

மேலும் செய்திகள்