கிராமமக்கள் திடீர் சாலை மறியல்

குடவாசல் அருகே மின்சாரம் தாக்கி பெண் இறந்ததை கண்டித்து கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2021-03-26 18:14 GMT
குடவாசல்:
குடவாசல் அருகே மின்சாரம் தாக்கி பெண் இறந்ததை கண்டித்து கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
மின்சாரம் தாக்கி பெண் சாவு 
திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை அருகே உடையார் குளத்தெரு பகுதியில் வசித்து வருபவர் மணி. விவசாய தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 50). நேற்று காலை மாரியம்மாள் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தபோது தெருவில் தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து மாரியம்மாள் மீது விழுந்தது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சாலைமறியல்
இந்தநிலையில் மின்சாரம் தாக்கி பெண் இறந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 
இந்த மறியல் போராட்டத்தினால் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்