இதுவரை ரூ.9 கோடி வரிவசூல்

உடுமலை நகராட்சியில் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ரூ.9 கோடி வரிவசூல் ஆகியுள்ளது. நிலுவை வரியை உடனே செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2021-03-26 18:04 GMT
உடுமலை
உடுமலை நகராட்சியில் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ரூ.9 கோடி வரிவசூல் ஆகியுள்ளது. நிலுவை வரியை உடனே செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
உடுமலை நகராட்சி
உடுமலை நகராட்சி பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 239 வரி விதிப்புகள் உள்ளன. இதன் மூலம் பழைய நிலுவைத்தொகை மற்றும் நடப்பு நிதி ஆண்டிற்கான வரி என மொத்தம் ரூ.5 கோடியே 30 லட்சத்து 91 ஆயிரம் வசூலாக வேண்டும். இதில் இதுவரை ரூ.3 கோடியே 85 லட்சத்து 79 ஆயிரம் வசூலாகி உள்ளது. ரூ.1 கோடியே 45 லட்சத்து 12 ஆயிரம் நிலுவை உள்ளது.
காலி இடவரியாக 1,751 வரி விதிப்புகளுக்கு ரூ.88 லட்சத்து 87 ஆயிரம் வசூலாக வேண்டியதில் இதுவரை ரூ.19 லட்சத்து 83 ஆயிரம் வசூலாகி உள்ளது. ரூ.69 லட்சத்து 4ஆயிரம் நிலுவை உள்ளது.
தொழில் வரியாக 1,877 வரி விதிப்புகளுக்கு ரூ.1 கோடியே 16லட்சத்து 48 ஆயிரம் வசூலாக வேண்டியதில் இதுவரை ரூ.54 லட்சத்து 45 ஆயிரம் வசூலாகி உள்ளது. ரூ.62லட்சத்து 3 ஆயிரம் நிலுவை உள்ளது. 10 ஆயிரத்து 775 குடிநீர் இணைப்புகளுக்கு கட்டணமாக ரூ.2 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரம் வசூலாக வேண்டும். இதில் ரூ.1 கோடியே 82 லட்சத்து 29 ஆயிரம் வசூலாகி உள்ளது. ரூ.69 லட்சத்து 21 ஆயிரம் நிலுவை உள்ளது.
கடை வாடகை
உடுமலை நகராட்சிக்கு சொந்தமான கடைகள் 275 உள்ளன. நகராட்சி கடைகள் மூலம் வாடகை, வாரச்சந்தை, பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் வந்துசெல்ல நுழைவுக்கட்டணம், மத்திய பஸ்நிலையம் மற்றும் ராஜேந்திரா சாலையில் உள்ள கட்டணக்கழிப்பிடங்கள் ஆகியவற்றின் மூலம் ரூ.5 கோடியே 65 லட்சத்து 19ஆயிரம் வசூலாக வேண்டும். இதில் இதுவரை ரூ.2 கோடியே 57 லட்சத்து 45 ஆயிரம் வசூலாகி உள்ளது. ரூ.3 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரம் நிலுவை உள்ளது.
மொத்தத்தில் கடந்த நிதி ஆண்டின் நிலுவைத்தொகை மற்றும் நடப்பு நிதி ஆண்டின் வரிகள், வாடகைகள் என மொத்தம் ரூ.15 கோடியே 52 லட்சத்து 95 ஆயிரம் வசூலாக வேண்டும்.இதில் இது வரைரூ.8 கோடியே 99 லட்சத்து 81 ஆயிரம் வசூலாகி உள்ளது. ரூ.6 கோடியே53 லட்சத்து14 ஆயிரம் நிலுவை உள்ளது.
70சதவீதம் வசூல்
நடப்பு நிதி ஆண்டிற்கான வரிகள் மற்றும் வாடகைகள் ஆகியவற்றின் வசூலைக் கணக்கிட்டால் 70சதவீதம் வசூலாகி உள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு நிலுவைத்தொகை வசூலையும், நடப்பு நிதி ஆண்டின் வரிவசூலையும் கணக்கிட்டால் 50 சதவீதம்மட்டுமே வசூலாகி உள்ளது.
அதனால் பொதுமக்கள் நகராட்சிக்கு கட்டவேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர்கட்டணம், நகராட்சி கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக கட்டவேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம்நகராட்சி நிர்வாகம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்