கிருஷ்ணகிரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்கு, அதுவே எங்கள் இலக்கு என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக மைதானத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் விரல் மை, நம் வலிமை என்பதை வலியுறுத்தும் வகையில் வாக்களிக்கும் முத்திரையில் ஒரு சேர நின்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, அன்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செந்தில்குமார், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் கற்பகவள்ளி, மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் தேவராஜ், உதவி தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் பொன்னாலா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.