தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மட்டக்கடை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சரவணன் (வயது 30). இவர் முத்துகிருஷ்ணாபுரம் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது, மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிருஷ்ணராஜபுரம் 7-வது தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் வள்ளிக்குமார் (35), சிலுவைப்பட்டி கணபதி நகரை சேர்ந்த பிச்சையா மகன் கிறிஸ்டோபர் (35) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வள்ளிக்குமார், கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.