தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-03-26 16:00 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, இந்திய உணவுக்கழக குடோன் அருகே உள்ள ஒரு லாரி புக்கிங் அலுவலகத்தில் பணம் வைத்து சூதாடியதாக திருஞானம் (வயது 40), முருகன் (45), யுவராஜ் (32) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 140 பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்