கொடைக்கானல் அருகே தேவாலயத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி

கொடைக்கானல் அருகே தேவாலயத்தின் மீது விவசாயி ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.;

Update: 2021-03-26 15:23 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகேயுள்ள பிரகாசபுரம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது 50). விவசாயி. இவருக்கும் இன்னொருவருக்கும் இடைேய நிலத்தகராறு இருந்தது. இது தொடர்பாக குழந்தைராஜ் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் போலீசார் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக கூறி குழந்தைராஜ் நேற்று பிற்பகலில் அங்கு உள்ள ஒரு தேவாலயத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.  இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று குழந்தைராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை தேவாலயத்தின் மேலே இருந்து கீழே இறக்கினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்