ஒன்றிய அளவிலான ஓவிய போட்டி உடன்குடி அரசு பள்ளி மாணவிக்கு விருது

ஒன்றிய அளவிலான ஓவியப் போட்டியில் உடன்குடி அரசு பள்ளி மாணவிக்கு விருது வழங்கப்பட்டது.

Update: 2021-03-26 13:31 GMT
உடன்குடி:
கொரோனா பேரிடர் காலத்தில் வீட்டிலிருக்கும் மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஒருங்கிணைநத பள்ளிக்கல்வி சார்பில் பள்ளிகள் மற்றும் ஒன்றிய அளவிலான ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 3 ஓவியங்களில் இருந்து சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு ஒன்றிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட்டன. இதில், ஒன்றிய அளவில் உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 7-ஆம் வகுப்பு மாணவி தனலட்சுமி முதல் பரிசைப் பெற்று, ரங்கோத்சவ் விருதைப் பெற்றார். 2-வது மற்றும் 3-வது பரிசுகளை இடைச்சிவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் த.மீனா, அ.அனுஷா ஆகியோர் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவிகளை வட்டார கல்வி அலுவலர் முருகேஸ்வரி, வட்டார மேற்பார்வையாளர் பொ.சகுந்தலா, ஆசிரியர் | பயிற்றுநர்கள் ஜெயலட்சுமி, ருக்மிணி, ஷோபா, விக்டர்.தலைமை ஆசிரியர் பிரின்ஸ் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினர்.

மேலும் செய்திகள்