திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக செயற்குழு கூட்டம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக செயற்குழு கூட்டம் நடந்தது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக செயற்குழு கூட்டம் நடந்தது. பயின்றோர் கழக தலைவரும், கல்லூரி முதல்வருமான மகேந்திரன் தலைமை தாங்கினார். பயின்றோர் கழக துணை தலைவர் ஜெயபோஸ், செயலாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசிங், சித்திரை ராஜா, பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு வங்கி பணி, மத்திய மாநில அரசு அலுவலக பணி தேர்வுகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயிற்சி வகுப்புகள் நடத்துதல், கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளுதல், மாணவர்களிடையே போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்திட்ட பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை பயின்றோர் கழக இணை செயலாளரும், தமிழ் துறை தலைவருமான கதிரேசன் செய்து இருந்தார்.