தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
கட்டுப்பாட்டு அறையை தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
திருப்பூர்
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு 535 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கும் வகையில், திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதிலும் 24 மணி நேரம் கண்காணிக்கும் வகையிலும், புகார்களை பெறும் வகையிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த கட்டுப்பாட்டு அறையை தேர்தல் செலவின பார்வையாளர் சுஹாசினி கோட்மர் ஆய்வு செய்தார். அப்போது இதுவரை வந்த புகார்களின் விவரங்கள் அடங்கிய கோப்புகள் மற்றும் அதன் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து புகார்கள் வந்தால் உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.