சேலத்தில் மாடு திருடிய 2 வாலிபர்கள் கைது

சேலத்தில் மாடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-03-25 23:45 GMT
சேலம்:
சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 35). இவர் வீட்டில் பசுமாடு வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த பசுமாட்டை மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த மர்ம நபர்களை பிடித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், பசுமாட்டை திருடியது அதே பகுதியை சேர்ந்த யூசுப் (27), சர்தார் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பசு மாடு மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்