சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் நேற்று 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 37 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 45 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பாரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15 பேர், எடப்பாடியில் 5 பேர், ஓமலூர், நங்கவள்ளி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், பனமரத்துப்பட்டி, சேலம் ஒன்றியம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, கொளத்தூர், மேச்சேரி, சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிஸ்சார்ஜ்
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 203 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 243 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.