சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமிகணேசன் திருத்தங்கலில் வீதி, வீதியாக பிரச்சாரம் - வர்த்தகர்களிடம் ஆதரவு திரட்டினார்

சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமிகணேசன் திருத்தங்கலில் வீதி, வீதியாக பிரச்சாரம் செய்து வர்த்தகர்களிடம் ஆதரவு திரட்டினார்.

Update: 2021-03-25 23:36 GMT
சிவகாசிசட்டமன்ற தொகு தியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெற்றி வேட் பாளர் லட்சுமி கணேசன் கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் பல்வேறுபகுதியில் சூறாவளிபிரசாரம் செய்து வருகிறார். குறிப்பாக சமுதாய தலைவர்கள், சமூகஆர்வலர் கள், கூட்டணி கட்சி நிர்வாகி கள், தொழிலதிபர்கள், தொழி லாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப் போது ஆர்.ஜி.எஸ்.காலனி, நாரணாபுரம், விநாயகர் காலனி, ஏ.டி,காலனி, நாரணாபுரம் புதூர், ஆலமரத்துப்பட்டி புதூர், ஆலமரத்துப்பட்டி, ஆலமரத்துப்பட்டி வடக்கு தெரு, அதிவீரன்பட்டி, சுக்கிர வார்பட்டி ஆகியஇடங்களில் தீவிரபிரச்சாரம் செய்த அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசன் பொது மக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித் தார். லட்சுமி கணேசனுக்கு வரவேற்பு கொடுத்த பொது மக்கள்தங்கள் வாக்கு நிச்சயம் வெற்றிசின்னம் இரட்டை இலைக்கு என்றுஉறுதிகூறினர். பல பெண்கள்ஆரத்தி எடுத்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி திலகமிட்டனர். இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பலராம், வேண்டுராயபுரம் சுப்பிரமணி, புதுப்பட்டி கருப்பசாமி, சிவகாசி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சுடர்வள்ளி சசிக்குமார், நாரணாபுரம் மகேஸ்வரி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நடிகர் கார்த்திக் தலைமை யிலான மனிதஉரிமை காக்கும் கட்சியின் விருதுநகர் மாவட்ட தலைவர் முருகராஜ் பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் அ.தி.மு.க. வேட் பாளர் லட்சுமி கணேசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய போவதாக உறுதிஅளித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமி நாராயணன் மற்றும் மனித உரிமை காக்கும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர்.

நேற்று காலை திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகள் 2, 12,14, 15, 16, 17, 18, 19, 20, 21 ஆகியஇடங்களில் வீடு, வீடாக அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசன் வாக்கு சேகரித்தார்.பஜார் பகுதியில் பிரசாரம் செய்த லட்சுமி கணேசன் வர்த்தகர் களிடம் ஆதரவு திரட்டினார்.அவருடன் நகர செயலாளர்

பொன் சக்திவேல், முன்னாள் கவுன்சிலர்கள் ரமணா, கோவில் பிள்ளை, காளிராஜ், பொன் முருகன், கிருஷ்ண மூர்த்தி, ஆ.செல்வம், சசிக்குமார், சேதுராமன், ரவிச் செல்வம் உள்படபலர் கலந்து கொண்டனர். வாக்கு சேகரிப்பின் போது அ.தி.மு.க. மகளிர் அணியின் 200&க்கும் மேற்பட்டவர்கள்கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு செய்தசாதனைகளை துண்டு பிரசுரங்களாக வீடு, வீடாக கொடுத்து வாக்கு சேகரித்தனர். இதே போல் லட்சுமி கணேசன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தங்கல் நகர் மன்ற தலைவராக இருந்த போது செய்த சாதனைகளை பட்டிய லிட்டு வாக்கு கேட்டார்.பல இடங்களில் பெண்கள் மலர்தூவிவரவேற்றனர். சிலர் இளநீர், மோர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்