இலவச வீடு கிடைக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் நடிகை நமீதா பேச்சு
இலவச வீடு கிடைக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று நடிகை நமீதா கூறினார்.;
குண்டடம்
இலவச வீடு கிடைக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று நடிகை நமீதா கூறினார்.
நடிகை நமீதா
தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் எல்.முருகனை ஆதரித்தும், அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறும், சினிமா நடிகை நமீதா தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் செய்தார். அவர் நேற்று குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெல்லம்பட்டி, மானூர் பாளையம், காணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது
தாமரை மலரும்
மக்களுக்கு மகத்தான திட்டங்களான விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், வருடத்திற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள், குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1500, இடம், வீடு, இல்லாதவர்களுக்கு இலவசமாக வீடு, உப்பாறு அணைக்கு பாசனத்திற்கு தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க கூட்டணி அரசு செய்து கொடுக்கும். எனவே தாராபுரம் சட்ட மன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எல். முருகனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். தமிழகத்தில் தாமரை மலரும், தமிழ்நாடு வளரும்.
இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது அ.தி.மு.க., பா.ஜனதா, மற்றும் குண்டடம் ஒன்றிய அணைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்