துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
மூலனூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
மூலனூர்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் அனைத்து பகுதிகளிலும் முழு வீச்சில் நடந்து வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் 70 பேர் மூலனூர் வந்துள்ளனர். அவர்கள் நேற்று மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவாநந்தம் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.