சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2021-03-25 22:48 GMT
சேலம்:
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த திருமனூர் வடக்கு காட்டுப்பகுதியை சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் அய்யனார் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி 7 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
தொடர்ந்து அந்த சிறுமியை திருமனூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு புதருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டார். சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினாள்.
20 ஆண்டுகள் சிறை தண்டனை
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வாழப்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அய்யனாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அய்யனாருக்கு கொரோனா பரிசோதனை செய்து அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்