டி.ஜி.புதூர் அருகே பலத்த காற்று வேருடன் சாய்ந்த வேப்ப மரம்; மோட்டார்சைக்கிள் சேதம்

டி.ஜி.புதூர் அருகே பலத்த காற்றால் வேருடன் வேப்ப மரம் சாய்ந்து மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது.

Update: 2021-03-25 22:45 GMT
டி.என்.பாளையம்
டி.ஜி.புதூர் அருகே உள்ள காளியூர் பிரிவு பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. அப்போது அந்த பகுதியில் சாலை ஓரம் இருந்த வேப்பமரம் திடீரென வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது அந்த மரம் விழுந்தது. இதனால் மோட்டார்சைக்கிள் சேதம் அடைந்தது. மேலும் சாலையில் மரம் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து தொடங்கியது. 

மேலும் செய்திகள்