வாக்குக்கு பணம் வாங்குவது இல்லை என பேனர் வைத்த பொதுமக்கள்
வாக்குக்கு பணம் வாங்குவது இல்லை என கடையம் அருகே ஊர் மக்கள் பேனர் வைத்துள்ளனர்.;
கடையம், மார்ச்:
கடையம் அருகே பொட்டல்புதூரில் தென்காசி-அம்பை மெயின் ரோட்டில் மேல பஸ் நிலையத்தில் ஜமாத்தார்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. அதில், ‘எங்கள் ஜமாத்தில் யாரும் யாரிடமும் வாக்குக்கு பணம், பொருள் வாங்க மாட்டோம். யார் மூலமும் அதை கொடுக்க சொல்லி ஏமாறாதீர்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.