நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்குகள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டன

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்குகள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டன.

Update: 2021-03-25 21:39 GMT
நெல்லை, மார்ச்:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை என 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மேற்கண்ட தொகுதிகளில் தேர்தல் பணிக்காக சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 18-ந் தேதி நடந்தது. தேர்தல் பணியில் ஈடுபடும் அவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கு வசதியாக விண்ணப்ப படிவம்-12 வழங்கப்பட்டன. அவர்கள் பணி ஆணையுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். அந்த விண்ணப்பங்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அந்த விண்ணப்ப படிவங்கள் தபால் வாக்குகள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக சேகரிக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடக்கிறது. நெல்லை சட்டசபை தொகுதிக்கு பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியிலும், பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிக்கு பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியிலும், ராதாபுரம் சட்டசபை தொகுதிக்கு பணகுடி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியிலும், நாங்குநேரி தொகுதிக்கு வள்ளியூர் கெயின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியிலும், அம்பை தொகுதிக்கு சேரன்மாதேவி ஸ்காட் என்ஜினீயரிங் கல்லூரியிலும் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் தபால் வாக்குகள் வழங்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்