கஞ்சா விற்ற 4 பேர் கைது
கடலூரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனா்.;
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று இந்திராநகர், மார்க்கெட் காலனி, பாதிரிக்குப்பம் ஆகிய பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதிகளை சேர்ந்த முருகானந்தம் மகன் கார்த்திகேயன் (வயது 20), ராமு மகன் பிரசாந்த் (25), முருகன் மகன் பவித்ரன் (23), முத்துவேல் மகன் தமிழரசன் (21) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.