விபத்தில் கொத்தனார் சாவு

நெல்லையில் நடந்த விபத்தில் கொத்தனார் இறந்தார்.

Update: 2021-03-25 21:19 GMT
நெல்லை, மார்ச்:
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் கக்கன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பினார். பாளையங்கோட்டை- சீவலப்பேரி ரோட்டில் மணிகூண்டு அருகே சென்றபோது எதிரே சமாதானபுரத்தை சேர்ந்த சாமுவேல் (25) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும், பெருமாள் ஓட்டிவந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சாமுவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்