தம்பியை உலக்கையால் அடித்து கொன்ற அண்ணன் கைது
தம்பியை உலக்கையால் அடித்து கொன்ற அண்ணன் கைது
திருமங்கலம்,மார்ச்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள திருமால் கிராமத்தைச் சேர்ந்தவர் மொக்கை. இவரது மகன்கள் ராஜாராம் (வயது 45), மாயாண்டி (40). ராஜாராம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அந்த நிலத்தின் சொந்தக்காரர் நிலத்தை விற்பதற்கான ஏற்பாட்டைச் செய்தார். இதற்காக ராஜாராமுக்கு அவர் கமிஷன் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்ததும் அவரது தம்பி மாயாண்டி எங்கள் தந்தை காலத்தில் இருந்து இந்த நிலத்தை உழவு செய்து வருகிறோம். எனவே கமிஷன் தொகையில் தனக்கும் பங்கு தர வேண்டும் என கேட்டுள்ளார். இது தொடர்பாக அண்ணன்-தம்பிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜாராம் உலக்கையை எடுத்து மாயாண்டியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் ராஜாராமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.