விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டத்தைச் சேர்ந்தவர் சின்னமாரியப்பன் என்ற உப்பு மாரியப்பன் (வயது 47). இவர் விருதுநகர் அருப்புக்கோட்டை ரோட்டில் ஒரு காலனி அருகே முட்புதரில் மறைந்து நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் ரோந்து சென்ற கிழக்கு போலீசார் அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதோடு அவர் வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.