ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதல்: மளிகை பொருட்கள் விற்பனையாளர் பலி மனைவி படுகாயம்

மளிகை பொருட்கள் விற்பனையாளர் பலி

Update: 2021-03-25 18:56 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த உடையாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மன்சூர் (வயது 44). இவர் மளிகை பொருட்கள் மொத்த விற்பனையாளராக இருந்தார். இவரும், இவரது மனைவி மெஹராஜ் (40) என்பவரும் ராயக்கோட்டை -கிருஷ்ணகிரி சாலையில் பாலகுறி அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வேகமாக வந்த டிராக்டர், இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் மன்சூர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மெஹராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்