தேன்கனிக்கோட்டையில் நடுரோட்டில் நின்ற ஒற்றை யானை
நடுரோட்டில் நின்ற ஒற்றை யானை;
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாலம் கிராமம் அருகே உள்ளது சாம ஏரி. இரவு 7 மணியளவில் ஒற்றை யானை நடுரோட்டில் நின்று கொண்டு இருந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாகன ஓட்டிகள் பயந்த நிலையில் ஒரே இடத்தில் வண்டிகளை நிறுத்திவிட்டு நின்றனர். இதுபற்றி தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வனத்துறை ஊழியர் சென்று வனப்பகுதிக்குள் யானையை விரட்டி அடித்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.