கொரோனா விழிப்புணர்வு -பரிசோதனை
கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் எஸ்.எஸ்.கோட்டை, காளாப்பூரில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நடை பெற்றது. எஸ்.எஸ். கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது. முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு மாணவர்களுக்கு விழிப்புணர்வு பாடம் நடத்தினார். கொேரானா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும். கடைகளுக்கு தெருக்களுக்கு மற்றும் பள்ளிகளுக்கு வரும் போதும் செல்லும் போதும் தமிழக அரசு வழிகாட்டி உள்ள முககவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். உடம்பில் சளி,காய்ச்சல், இருமல் இருந்தால் பரிசோதித்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து மருத்துவர் முத்தமிழ் செல்வி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மற்ற கிருமி சார்ந்த நோய்கள் இருக்கின்றனவா என்பது குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டார். காளாப் பூரில் டாக்டர் செந்தில்குமார் மற்றும் பரணிராஜன் தலைமையில் சமுதாயக் கூடத்தில் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் இதர பரிசோதனைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செய்திருந்தது.