திருப்பத்தூர் அருகே; காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது

திருப்பத்தூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-03-25 18:00 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் கோட்ட வன அலுவலர் குமுளி வெங்கடஅப்பலாநாயுடுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் எம்.பிரபு தலைமையில் மட்றப்பள்ளி பிரிவுக்கு உட்பட்ட ஆண்டியப்பனூர் காப்புக்காடு சுற்றியுள்ள பகுதியில் வனவர் பி.வெங்கடேசன், வனக்காப்பாளர் டி.ஆர்.பாலாஜி, இளையராஜா, அன்பழகன் வனக்காவலர் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் (வயது 32), ரவி (50) ஆகியோர் அங்குள்ள நிலத்தில் ஒரு காட்டுப பன்றி குட்டியை வேட்டையாடி கறிைய அறுத்துக் கொண்டிருந்தனர். 

அதைப் பார்த்ததும் வனத்துறையினா் விரைந்து சென்று, அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்