பழனியில் தங்க மயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி அருள்பாலிப்பு
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முத்துக்குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பழனி,
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. இதன் 4-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.