நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.;

Update: 2021-03-25 16:49 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக 14 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது.  இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 566 ஆக உயர்ந்து உள்ளது. இதுதவிர நேற்று 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

இதுவரை 8 ஆயிரத்து 412 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 50 பேர் இறந்தனர். மீதமுள்ள 104 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்