காளியம்மன் கோவில் திருவிழா

கம்பத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

Update: 2021-03-25 16:34 GMT
கம்பம்:
கம்பம் கோம்பை சாலை தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 22-ந்தேதி தொடங்கியது. 

விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 

விழா நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு மேளதாளம் முழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். 

இந்த ஊர்வலம் கள்ளர் பள்ளி தெரு, மெயின் ரோடு, வடக்கு காவல் நிலையம், போக்குவரத்து சிக்னல், காந்தி சிலை வழியாக சென்று சுருளிப்பட்டி சாலை தொட்டன்மான் துறையில் முடிவடைந்தது. 

பின்னர் முளைப்பாரியை முல்லைப்பெரியாற்றில கரைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்