100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆவின் பால் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆவின் பால் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு கலெக்டர் தொடங்கி வைத்தார்.;

Update:2021-03-25 20:25 IST
திருவள்ளூர், 

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்களுர் ஆவின் பால் பண்ணையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா தலைமை தாங்கி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஆவின் பால் பொருட்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை பணிகளையும், வினியோகிக்கும் பணிகளையும் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் ஆவின் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் சுஜாதா, பால்வள துணை பதிவாளர் விஸ்வேஷ்வரன், உதவி பொது மேலாளர் லிடியா மார்கரெட், ஆவின் பால்பண்ணை மேலாளர்கள் உமாசங்கர், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஸ்வரன், ஆனந்த பால், சாய்சுதர்சன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்