உடன்குடி மகளிர் அரபுக் கல்லூரியில் கண்காட்சி

உடன்குடி மகளிர் அரபுக் கல்லூரியில் கண்காட்சி நடைபெற்றது.;

Update: 2021-03-25 12:14 GMT
உடன்குடி:
உடன்குடி ஷாபிஈ மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய கண்காட்சி நடந்தது. கண்காட்சி திறப்பு விழாவிற்கு கல்லூரி நிறுவனத் தலைவர் டி.எம்.அபூ உபைதா தலைமை தாங்கினார். நயினாப்பிள்ளை தெரு தலைவர் ஜமாலுத்தீன், பெரிய தெரு முத்தவல்லி ஹூசைன் முகைதீன், கொத்பா பள்ளி தெரு தலைவர் ஷாஹூல் ஹமீது, முஹைதீன் பள்ளி முத்தவல்லி பத்ருத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜூம் ஆ தொழுகைக்குப் பின் கண்காட்சியினை ஸஹீஹூல் புகாரி ஷரீபு சபை தலைவர் மவ்லவி நூஹூ முஹ்யத்தீன் திறந்து வைத்தார். கண்காட்சியில் மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகளின் கைவண்ணத்தில் மண்ணறை விளக்கம், மஹ்ஸர் மைதானம், குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள், அஸ்மா உல் ஹஸனா, நூஹ் நபி வரலாறு, ஐம்பெருங் கடமைகள், மக்கா, மதீனா, தவ்ர் குகை உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய மார்க்க வரலாற்றுச் சம்பவங்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியினை உடன்குடி, குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் பார்வையிட்டு மாணவிகளைப் பாராட்டினர்.

மேலும் செய்திகள்