தி.மு.க. ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும்; மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் பேச்சு
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட் டியிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் நேற்று கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்திரா காலனி,வ.உ.சி பணியாளர் குடியிருப்பு, நெசவாளர் காலனி, மாரியம்மன் நகர், கடைவீதி, மீனாட்சிபுரம், அக்ரஹாரத்தெரு, மாணிக்க புரம், பத்மசாலியர் தெரு, ஜூனியர் கல்லக்குடி, ஈச்சம்பட்டி கோட்டை, தம்பிரான்படுக்கை ஆகிய பகுதிகளில் தெருத் தெருவாக சென்று பொதுமக்களை சந் தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார்.அப்போது பொதுமக்கள் கான்கிரீட் சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது வேட்பாளர் எஸ்.கதிரவன் உங்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நான் நிறைவேற்றி தருகிறேன். தொகுதி மக்களின் நலனுக்காகவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பணம் சம்பாதிப்பதற்காக நான் வரவில்லை.மேலும் என் செயல்பாடு களை பார்த்து நீங்கள் அனைவரும் அடுத்த முறை கதிரவன் தான் எங்கள் தொகுதிக்கு வேண்டும் என்று சொல்லும்படியாக நடந்து கொள்வேன். தமிழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று கூறினார். அப்போது கட்சியினர் ஒருவர் வேட்பாளரின் கையில் புறாவை கொடுத்தார். அந்த புறாவின் கால்களில் தி.மு.க. கொடியின் வண்ண ரிப்பனை கட்டி புறாவை பறக்க விட்டார்.மேலும் மரக்கன்றுகள் நட்டார். சமயபுரம் கடைவீதி தெருவில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். தேநீர் விடுதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
இதில் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.பி.இளங்கோவன் மற்றும் சமயபுரம் நகர செயலாளர் துரை ராஜசேகரன், கூட்டணி கட்சி காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை மற்றும் மதசார் பற்ற கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.