நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுப்பேன்; அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குறுதி

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நூறு நாட்கள் வேலை திட்டம் நூற்று ஐம்பது நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குறுதி அளித்தார்.

Update: 2021-03-25 05:00 GMT
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து நேற்று அரசங்குடி பகுதியில் பஸ்சில் ஏறி பயணிகளிடமும், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்தனர். 

அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாடு பிடி வீரர்களுடன் பேசும்போது, தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற இடங்கள் அந்தந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வோம். 

இதேபோல் நவீன மயமான கால்நடை மருத்துவ மனையை திருவெறும்பூரில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை அடுத்து அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.எம்.கருணாநிதி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்