கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி

கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி;

Update: 2021-03-24 21:21 GMT
மணப்பாறை, 
மணப்பாறையை அடுத்த காரமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி. இவரது மகன் சிவனேசன் (வயது 16). அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் சிவனேசன் குளிக்கச்சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மூலம் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் மூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மாணவர் சிவனேசன் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்