மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

விருதுநகரில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலியானார்.

Update: 2021-03-24 20:54 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள செந்நெல்குடி கிராமத்தை சேர்ந்தவர் நிறைகுளத்து பாண்டி (வயது 47). இவரது மனைவி பாக்கியலட்சுமி (43). இவர்கள் இருவரும் கோட்டூர் ரோட்டில் துவரஞ்செடியை உலர வைத்து கொண்டிருந்தனர். அப்போது செந்நெல்குடியை சேர்ந்த நாகராஜன் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்த பாக்கியலட்சுமி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாக்கியலட்சுமி தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்