சிவகிரியில் வைகோ பிரசாரம்

ம.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சிவகிரியில் வைகோ பிரசாரம் செய்தார்.

Update: 2021-03-24 20:53 GMT
சிவகிரி, மார்ச்:
சிவகிரிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்தார். மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்தாார்.
அப்போது அவர் பேசுகையில், “நாடு நலம்பெற மக்கள் நலமுடன் வாழ வேண்டுமெனில் நேர்மையான வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேணடும். அதற்காக நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்