முன்விரோதத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து
திருவேங்கடத்தில் முன்விரோதத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
திருவேங்கடம், மார்ச்:
திருவேங்கடம் தாலுகா அய்வாய்புலிப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருக்கும், திருவேங்கடம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் திருவேங்கடம் - கழுகுமலை சாலையில் சந்தித்த இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் முருகன் ஆத்திரம் அடைந்து இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமசாமியை குத்தினாராம். பின்னர் சுதாரித்த ராமசாமி, முருகனை தாக்கினாராம். இருவரும் மாறி மாறி சண்டையிட்டதில் இருவரும் படுகாயமடைந்து சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.