கர்ப்பிணி தூக்குப்போட்டு சாவு

திட்டக்குடி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2021-03-24 20:20 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ள பட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி தேவி (வயது 20). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தேவி தற்போது கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த தேவி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவியின் தாய் கன்னிமேரி ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், சக்திவேல் எனது மகளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் மனமுடைந்து எனது மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தேவியை தற்கொலைக்கு தூண்டியதாக சக்திவேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட தேவிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார்  மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்