மதுரை கோட்டத்துக்கு தென்னக ரெயில்வே பொதுமேலாளர் விருது

மதுரை கோட்டத்துக்கு தென்னக ரெயில்வே பொதுமேலாளர் விருது வழங்கப்பட்டது.

Update: 2021-03-24 19:40 GMT
மதுரை,மார்ச்
தென்னக ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்கள் உள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வார விழாவில் சிறந்த செயல்பாட்டு கோட்டத்துக்கான விருது மற்றும் சுழற்கோப்பை பொது மேலாளரால் வழங்கப்படுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து, கடந்த 2019-20ம் ஆண்டுக்கான ஆய்வில் சேலம் கோட்டம் சிறந்த செயல்பாட்டுக்கான கோட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2-வது இடத்தை மதுரை கோட்டம் பெற்றுள்ளது. ஆனால், கொரோனா ஊரடங்கால் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இந்த நிலையில், தென்னக ரெயில்வே மண்டல அலுவலகத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மதுரை கோட்டத்துக்கான விருது மற்றும் சுழற்கோப்பையை பொதுமேலாளர் ஜான்தாமஸ் கோட்ட மேலாளர் லெனினிடம் வழங்கினார். அத்துடன் துறை சார்ந்த சிறந்த செயல்பாட்டுக்கான சுழற்கேடயத்தை மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரி சார்பில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர் பெற்றுக்கொண்டார். வர்த்தக துறைக்கான கேடயத்தை முதுநிலை வர்த்தக மேலாளர் பிரசன்னா, நிதித்துறைக்கான கேடயத்தை முதுநிலை நிதி மேலாளர் மாதுரி ஜெய்ஸ்வால், மின்துறைக்கான கேடயத்தை முதுநிலை மின் என்ஜினீயர் பத்மநாபன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்