வீடுகளில் தனிமைப்படுத்தி 21 பேர் கண்காணிப்பு
கொரோனாவால் பாதிப்பட்ட 21 பேர் வீடுகளில் தனிப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது 94 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 21 பேர் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்துறையினர் வீடுகளில் ஆய்வு செய்து தனிஅறை வசதி உள்ளதா என்பதை கண்காணித்து வீடுகளில் தனிமைப்படுத்த அனுமதி வழங்குகின்றனர்.
வீடுகளில் தனிமைப்படுத்த பட்டவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்பு கொண்டு வழிமுறைகளை கடைபிடிப்பது, நலமாக உள்ளார்களா, அறிகுறிகள் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.