ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ1¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-24 18:51 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட நடுப்புணி ரோடு சேர்வகாரன் பாளையத்தில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

 இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் வாகனத்தில் வந்தவர் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மணிவேல்  என்பது தெரியவந்தது. 

ஆனால் ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதேபோன்று ஜமீன்முத்தூரில் நடந்த சோதனையில் காரில் ரியாஸ் என்பவரிடம் ரூ.60 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்