ஏரல் தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா 27-ந் தேதி தொடங்குகிறது

ஏரல் தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2021-03-24 13:19 GMT
ஏரல்:
ஏரல் தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்று இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு அம்மன் மாக்காப்பு, சிறப்பு தீபாரதனை நடைபெறுகிறது. முக்கிய திருவிழாவான பங்குனி உத்திரம் 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை 8.30 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 
29-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அன்னம் படைத்தல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்