குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

பெரியகுளத்தில் தென்கரையில் உள்ள கிருஷ்ணன் கோவில் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி செல்கிறது.

Update: 2021-03-24 12:30 GMT
பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சி தென்கரையில் உள்ள 15-வது வார்டில் கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. 

கோவில் பின்புறம் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

இந்த கோவில் அருகே உள்ள பகுதியில் பல நாட்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்கிறது. 

இந்த உடைப்பை சரி செய்யாமல் இருப்பதால் அந்த தண்ணீர் சாலையோர பள்ளத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. 

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே குழாய் உடைப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்