தூத்துக்குடி கோர்ட்டில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம்

தூத்துக்குடி கோர்ட்டில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது.

Update: 2021-03-24 11:54 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான என்.லோகேசுவரன் உத்தரவின்பேரில், மாவட்ட சித்த மருத்துவ பிரிவு சார்பில் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கபசுரகுடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆர்.சாமுவேல் பெஞ்சமின், மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் ராஜசெல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமில் கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் உதவி சித்தமருத்துவ அலுவலர் சங்கரராமசுப்பிரமணியன், மருந்தாளுநர் வி.சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்