திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விழிப்புணர்வு புத்தாக்க பயிலரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விழிப்புணர்வு புத்தாக்க பயிலரங்கம் நடந்தது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்.44 சார்பில், மாணவர் விழிப்புணர்வு புத்தாக்க பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான கதிரேசன், விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். இப்பயிலரங்கத்தில் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள், இளைஞர்களின் எதிர்காலம், கோவிட் 19, வாக்காளரின் ஜனநாயக கடமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர் செயலர் லிங்கேஷ்வர் நன்றி கூறினார்.