சுல்தான்பேட்டையில் முக கவசம் அணியாத 120 பேருக்கு அபராதம்
சுல்தான்பேட்டையில் முக கவசம் அணியாத 120 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சுல்தான்பேட்டை,
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை வட்டாரத்தில் கொரோனா பரவாமல் தடுக்க வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் வனிதா தலைமையில், டாக்டர்கள் அபிநயா, சூர்யா, சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன் ஜெயராம் அடங்கிய பறக்கும் படையினர் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடை வெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
அதன்படி 120 பேருக்கு அபராதம் விதித்து ரூ.28 ஆயிரத்தை வசூலித்து உள்ளனர். எனவே பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.