ஒரே தொகுதிக்குள் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே தொகுதிக்குள் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்களும் களம் காண்கிறார்கள்.;

Update: 2021-03-24 00:02 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே தொகுதிக்குள் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்களும் களம் காண்கிறார்கள்.
முக்கிய வேட்பாளர்களின் பெயரில்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர். ஒரே தொகுதிக்குள் ஒரே பெயரில் வேட்பாளர்கள் இருப்பது வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இது முக்கிய வேட்பாளர்களின் வாக்குகளை பிரிக்கும் யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சு.குணசேகரன் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் ஐ.குணசேகரன், மோ.குணசேகரன் ஆகிய சுயேச்சை வேட்பாளர்கள் இருக்கிறார்கள். பல்லடம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக முத்துரத்தினம் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் மு.முத்துரத்தினம், ல.முத்துரத்தினம் என்ற பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.
தாராபுரம்
மடத்துக்குளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் மகேந்திரன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார். ஆர்.முருகன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 
அதுபோல் தி.மு.க.வேட்பாளராக கயல்விழி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் கு.கயல்விழி, பெ.கயல்விழி ஆகியோர் சுயேச்சையாக களம் காண்கிறார்கள்.
காங்கேயம்
காங்கேயம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் ந.ராமலிங்கம் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஒரே தொகுதியில் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்களும் களம் இறங்கி இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்